எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Geeths - எண்ணம் (public)
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா

    மேலும்

    நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
    போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
    மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
    மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

நான் அனிதா

மழைக்காலத்தில் ஒழுகும் வீட்டின் சுவர் இடிந்து விழுமோவென்ற பயத்தில் தூங்கிக்கொண்டிருப்பேன்; பயந்தபடியே ஒரு நாள் சுவர் இடிந்து விழுந்துவிட்டது. அந்த வாடகை வீட்டில் சரியாக மூடாத தாழ்ப்பாள் உண்டாக்கும் அச்சத்தைத் தைரியம் தந்து போக்குவது அம்மாதான். சாராயக் கடையில் எடுபிடி வேலை செய்து அப்பா தினக்கூலியைக் கொண்டு வந்த பிறகுதான் வீட்டில் அடுப்பு எரியும். சில ஞாயிற்றுக் கிழமைகளில் மதியச் சாப்பாடு கிடைக்கும்போது மாலை ஐந்து மணியாகியிருக்கும். அரிசி வாங்க பணம் இல்லாதபோது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாயை வைத்து மரச்சீனிக் கிழங்கு வாங்கி அம்மா சமைத்துத் தருவாள். இறைச்சி சாப்பிடுவதெல்லாம் அபூர்வமான விஷயம்; வருஷத்துக்கு இரண்டு அல்லது அதிகபட்சமாக நான்கு நாட்கள் இறைச்சிச் சாப்பாடு கிடைக்கும்.ராவல்கன் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிச் சாப்பிட எப்போதாவது பதினைந்து பைசா தருவார் அப்பா. 35 பைசாவுக்குக் காட்பரி சாக்லேட் வாங்குவது வெறும் கனவாகவே இருந்த பள்ளி நாட்கள் அவை. பசி கொடுத்த உந்துதலுக்கு வேறெதுவும் நிகர் இல்லை. வகுப்பில் வாங்கும் முதல் மதிப்பெண்தான் இதற்கெல்லாம் ஈடுகட்டும் ஒரே பதில். யாராவது சில மதிப்பெண்களில் முந்திவிட்டால் அதை முறியடிக்கும் வேகத்தை வறுமைதான் கொடுத்தது. பசி எரிபொருள்; படிப்பு மட்டுமே வறுமையிலிருந்து விடுதலை செய்யும் ஆயுதம். படிக்கிற மொழியும் அதிலிருந்து உருவாக்குகிற சொற்களும்தான் எங்கள் மீட்சிக்கான ஒரே கருவியென்ற ஞானம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருந்தது. யார் என்ன சொன்னாலும் படிப்பில் சமரசம் செய்யாத உறுதியை அவர்கள் தந்திருந்தார்கள்.அந்த உறுதியைக் குலைக்கும் பல விஷயங்களை அவர்களே செய்வார்கள்; சோத்துக்கு வழியில்லையென்று அப்பாவுக்கும் அம்மாவுக்குமிடையே சண்டை வரும்போது, பக்கத்து வீட்டுப் பையன் கேரளாவுக்குக் கொத்தனார் கையாளாகப் போவதை அப்பா சொல்லிக் காட்டுவார். பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதுபோல குற்ற உணர்வில் கூனிக்குறுகிப் புழுவாய் நெளிவேன். அக்கம்பக்கத்து வீடுகளில் பட்டப்படிப்பு முடித்து பஸ் கண்டக்டராகவும் ஆசிரியராகவுமான அண்ணன்மார் நான் சிறப்பாகப் படிப்பதைப் பாராட்டி, தங்களைப்போல அரசு உத்தியோகம் கிடைக்குமென்று ஆசை காட்டுவார்கள். படித்த அரசுப் பள்ளியில் எந்தத் தரக்குறைவையும் நான் பார்க்கவில்லை. படித்து ஆளாகி பிறகு சமூகத்தைக் கவனிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் திரும்பத் திரும்பச் சொல்லித் தருவார்கள் (ரத்னாபாய் டீச்சர், அகஸ்டின் சார், பங்கிராஸ் என்று பெரிய பட்டியல் அது). படிப்பைத் தவிர வேறு எதுவும் நம்பிக்கை அளிக்காத வயது அது.1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவுக்கும் அந்தத் தெளிவை அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கழிவறைகூட இல்லாத குடிசையிலிருந்து மருத்துவப் படிப்பைக் கனவு கண்ட அனிதாவாக நான் இருந்திருக்கிறேன். அனிதாவால் 12ஆம் வகுப்புவரை தக்க வைக்க முடிந்த முதலிடத்தை என்னால் 10ஆம் வகுப்புக்கு மேல் தக்க வைக்க முடியவில்லை. காரணம், 11 ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்விக்கு மாறிவிட்டேன். கணக்கு வாத்தியாரின் கடும் சொற்களும் மொழி மாற்றமும் என் வேகத்தையும் வைராக்கியத்தையும் குறைத்தன. சில கடும் சொற்களேகூட தன்னம்பிக்கையைச் சீர்குலைத்துவிடும் இளம் பிராயம் அது.அம்மாவின் பைபிளையும் அப்பாவின் குர்ஆனையும் ஆசிரியை சரஸ்வதியின் கீதையையும் மாறி மாறிப் படித்து தேடல் ஆரம்பித்த நாட்கள் அவை. காட்பரி சாக்லேட் சாப்பிட்டு அப்பாவின் சிங்கப்பூர் வேலையைப் பற்றிப் பெருமை பேசிய பக்கத்துத் தெரு பிள்ளைகளினால் உண்டான தாழ்வுணர்ச்சியை ஜெயிக்க ஒருவேளை இந்த வேதப்புத்தகங்களுக்குப் பின்னால் ஒளிய ஆரம்பித்தேனோ என்று தெரியவில்லை. அனிதாவிடம் ஒரு முறை பேசியிருந்தால் இந்தக் கதைகளைச் சொல்லி அவளைத் தேற்றியிருப்பேனோ என்றும் தெரியவில்லை. நான் அனிதாவாக இருந்திருக்கிறேன். இப்போது மீண்டும் அனிதாவாகியிருக்கிறேன். மக்களின் பசியறியாத, வலியறியாத ஆட்சியாளர்களும் நீதிபதிகளும்தான் என்னைக் கொன்றுவிட்டார்கள். அவர்களைப் பதவிகளிலிருந்து இறக்குவேன். எனது ஆட்சி வரும்போது ஆயிரமாயிரம் அனிதாக்கள் டாக்டர்களாக வாழ்ந்து காட்டுவார்கள். இது சத்தியம். இது நிச்சயம் வெல்லும் சொல்.

மேலும்

அப்துல் கலாம் கனவை நாம் நனவாக்குவோம் ஆங்கில அலோபதி மருத்துவத் துறை கிடைக்காவிட்டால் வேறு இந்திய சித்த ஆயுர்வேத ஹோமியோபதி மருத்துவத் துறையை படித்து மக்கள் தொண்டாற்ற வேண்டும் அடுத்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்கவும் செய்திருக்கலாம் அரசியல் துறை , நீதித்துறை ஏழை மக்களின் அவர்கள் கனவை நிறைவேற விடாமல் தடுத்து விடுகிறதே ! 07-Sep-2017 10:17 pm
வாழ்க்கைப் போராட்டம் நினைவலைகள் கண்ணீர் இலக்கியம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 07-Sep-2017 10:09 pm

மேலே