எண்ணம்
(Eluthu Ennam)
ஜி. கே. வாசன் அவர்களுக்கு அவரது தந்தை ஜி.கே. மூப்பனார் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு கிடையாது. அவர் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்து சில இடங்களிலாவது வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வந்திருப்பார் என்று தோன்றுகிறது. அவர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து தேய்ந்து போன அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கவேண்டும். எனவே செல்வி ஜெயலலிதா அவர்கள் ஜி.கே. வாசன் அவர்களின் த.மா.கவையும் வேல்முருகன் அவர்களின் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில உதிரிக் கட்சிகளையும் புறக்கணித்தது சரியான முடிவு என்பதில் ஐயமில்லை.