எண்ணம்
(Eluthu Ennam)
#அதலைக்காய்#உலகில்_எந்த_நாடுகளிலும் வளர முடியாது #தமிழ்_நாட்டில் மட்டும் விளைகின்ற அதாவது... (ஜெகன் ரா தி)
03-Oct-2017 9:47 pm
#அதலைக்காய்
#உலகில்_எந்த_நாடுகளிலும் வளர முடியாது #தமிழ்_நாட்டில் மட்டும் விளைகின்ற அதாவது வெளிநாட்டு மக்கள் #அதிக_பணம் குடுத்தும் கிடைக்காத பல செடி கொடி மூலிகை வகைகள் நம் தமிழ் நாட்டில் #இலவசமாக தெரு ஓரங்களில் கிடைக்கின்றன. (அக்கரைக்காரம், ஆவாரம் செடி, கவிழ் தும்பை, தும்பை, கிணற்று பாசான், அவுரி இது போன்றவை).
அந்த வகையில் தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அதிலும் குறிப்பாக நம் #மதுரை_திருமங்கலம்,விருதுநகர்,சாத்தூர் கிராம பகுதியில் கிடைக்கும் இந்த #அதலைக்காய்.
அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு காய் அதலைக் காய்.
இது #சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
இந்த அதலைக்காய் சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணி.
இதை தனியாக விவசாயம் செய்ய முடியாது. தானாகவே காட்டில் வளரும் தன்மை கொண்டது.
அதலைக்காய், பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது. கசப்பு தன்மை இருந்தாலும் ருசி மிகுந்தது..
இதனை பொறியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதன் மனமே அதன் சுவையை சொல்லும். இந்த காயை பறித்த சில மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டும்.தவறினால் காய் வெடித்து விடும்.
இதனாலே இது பிற மாவட்டங்களுக்கு கூட சமையலுக்கு போக முடியாத நிலை.
அந்த வகையில் நம் பகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
#அதலைக்காய் சீசன் ஆரம்பிச்சிருச்சி....