எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீபாவளி வண்ண விளக்கு அலங்காரம்

மேலும்

தீபாவளி அலங்காரத்துடன் ஊர்வலம் வரும் புதிய ரயில்கள்

சிங்கப்பூர்: தீபாவளி என்றாலே ஆண்டுதோறும் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்காரத்துக்குப் பஞ்சம் இல்லை.
ஆனால் இவ்வாண்டு தீபாவளி அலங்காரங்கள் அதையும் தாண்டி செல்கின்றன.




தீபாவளியை முன்னிட்டு தீபாவளி கருப்பொருள் கொண்ட புதிய ரயிலை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிமுகப்படுத்தியது.




நூதன இந்திய நகை வடிவமைப்புகள், தாமரை பூக்கள், மயில்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த ரயில், வடகிழக்கு ரயில் பாதையில் நவம்பர் மாதம் மத்தி வரை பயணிகளுக்காக இயங்கவிருக்கிறது.


தீபாவளி அலங்காரத்துடன்



இனி லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அங்கு செல்லும் வழியிலேயும் தீபாவளி குதூகலத்தை உணரலாம்.

மேலும்

சிங்கப்பூர் தீபாவளி

தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டாடித் தீர்ப்பார்கள் இந்தியர்கள். இதில் சிங்கப்பூர் கொஞ்சம் சிறப்பு. ஏன்... இந்தியாவைவிடவே வெகு சிறப்பு! ஆம், தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே சிங்கப்பூரில் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முக்கியமான ஒரு சாலையை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து அசத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அசத்தல் ஆரம்பமாகி விட்டது.

தீபாவளியன்று பெரும்பாலான தமிழர்கள் இங்கே கூடி கொண்டாடு வார்கள். அன்றைய தினம் சிங்கப்பூர் அரசின் பிரதமர் அல்லது அமைச்சர் என யாராவது ஒருவர் லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்து பட்டாசு வெடிக்கும் வைபவத்தைத் தொடங்கி வைப்பதும் பல ஆண்டுகளாகவே நடக்கிறது.

தீபாவளிக்கு இங்கே விடுமுறை உண்டு. தீபாவளியானது ஞாயிற்றுக் கிழமையில் வந்தால், கூடுதலாக திங்கள்கிழமையன்று விடு முறை கொடுப்பதும் பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப் பூரில் வேலை பார்க்கும் தமிழர்கள்தான் பெரும்பாலும் லிட்டில் இந்தியாவில் கூடுவார்கள். சிங்கப்பூர் குடியுரிமையோடு இருப்பவர்கள், பெரும்பெரும் அரங்கங் களில் கூடி ஆட்டம் பாட்டம் என தீபாவளியைக் கொண்டாடுவார்கள்!
 லிட்டில் இந்தியா வைபவங்களை, சிங்கப்பூர் அரசின் இந்து அறநிலைய வாரியம் (HEB), சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) ஆகியவற்றின் ஆதரவோடு லிட்டில் இந்தியா வியாபாரிகள் மற்றும் கலாசார அமைப்பு (LISHA) ஒருங்கிணைக்கிறது.

மேலும்


மேலே