எண்ணம்
(Eluthu Ennam)
ஒல்லியான கருப்பு வேட்டி சட்டை போட்ட நபர் ஒருவர் ஒரு சைவ ஹோட்டலுக்கு வந்தார்
நேராக டெலிவரி செக்ஷனில் இருக்கும் ஒரு நபரிடம் "ரெண்டு இட்லி கொட்றா " என்கிறார்
அவன் டோக்கன் இல்லாமல் தர முடியாது
உடனே அவரிடம் "ரெண்டு இட்லி இருபத்தி எட்டு ரூபாய் " என்கிறான்
அவர் மறுபடியும் "ரெண்டு இட்லி கொட்றா " என்கிறார்
தழுதழுத்த குரலில்
பையில் இரண்டு பத்து ரூபாய் தாள்கள் எடுத்துப் பார்க்கிறார்
அப்படியே மெல்ல நடக்கிறார்
வேலை செய்யும் பையனும் கண்ணீர் மல்க பார்க்கிறான் ..
௧) வேலை செய்யும் பையனாலும் உதவ முடியாத நிலை
௨) அவனும் மிரட்டலிருந்த்து கனிந்து வந்து விட்டான் . பசி வேறு
ஒரு டீக்கடைக்காரன் கூட ஏதாவது கொஞ்சம் கொடுத்து இருப்பான் .. ஆனால் இங்கு நிலை வேறு
ஒரு சினிமா பார்க்க திரையரங்கில் 40 ரூபாய் டிக்கெட்டும் 200 டிக்கெட்டும் உள்ளது போல் , எல்லா உணவகங்களிலும் ௫ ரூபாய் இட்லி 20 பேருக்கு கொடுக்கப்படும் என அரசாங்கம் வைத்தால் தான் என்ன ?
ஆம் ஐயா. ஆனால் எல்லா உணவகங்களும் தினமும் கொஞ்சம் பேருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய ஆதங்கம் 23-Nov-2017 9:46 am
அம்மா உணவகம் குறைந்த விலையில் தருகிறார்களே ! இப்பொழுது நடக்கிறதா ?
அது போல் அண்ணா தம்பி நண்பன் உணவகங்களை வள்ளன்மை கொண்ட
சிலர் நடத்தினால் நீங்கள் சொல்லும் லட்சியம் ஓரளவிற்கு நிறைவேறலாம்.
23-Nov-2017 7:59 am