எண்ணம்
(Eluthu Ennam)
கனவு பயணம் கவிதை
நான் கண்ட கனவு
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் நான் கண்ட கனவு இது
பொதுவாக நாம் காணும் கனவுகள் விழிப்பு வந்ததும் மறந்து விடும் ஆனால் இன்று நான் கண்ட கனவை மறக்க முடியவில்லை.
பொதுவாக நாம் நினைக்கும் செயல்களே கனவு வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள் நானும் அதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன் ஆனால் நேற்று இரவு படுக்கும் போது எந்த வித சிந்தனைகளும் இல்லாமல் படுத்து உறங்க ஆரம்பித்தேன்.
லாஜிக்கே இல்லாமல் சில படங்கள் வரும் அதை நாமும் பார்த்து இருப்போம் அது போல தான் எனது கனவும் நான் கண்ட கனவில் எந்த லாஜிக்கும் இல்லை.
ஒரு அடர்ந்த காட்டுக்குள் நாங்கள் எல்லாம் தங்கி இருக்கிறோம் தினம் அங்கு சில வகுப்புகள் நடக்கிறது அதுவும் பகலில் அல்ல இரவில்.
அப்போது தான் அங்கு இருக்கும் ஒரு வீட்டில் பேய்கள் இருப்பதாக கேள்விப்படுகிறோம் எங்கள் அனைவரையும் பயம் பற்றிக்கொள்கிறது.
திடீரென ஒரு உருவத்தின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது நாங்கள் அனைவரும் பயந்து நடுங்கியபடி நிற்கிறோம் சிறிது நேரத்தில் ஒரு குரல் எங்களை நோக்கி பேச ஆரம்பிக்கிறது நாங்கள் அனைவரும் மேலும் பயந்து நடுங்கியபடி நிற்கிறோம்.
சிறிது நேரத்திற்கு பின் அந்த குரல் ஆட்டு ரத்தம் கேட்கிறது அய்யய்யோ ஆட்டு ரத்தத்துக்கு எங்கே போறது என நினைக்கும்போதே அருகில் ஆடு ஒன்று இருக்கிறது உடனே அந்த ஆட்டினை பிடித்து கொண்டு போய் அந்த குரல் வரும் இடத்தில் விட்டு விட்டு வருகிறோம்.
பின்னர் ஒரு உருவம் வேகமாக வந்து ஆட்டை பிடிக்கிறது திடீரென நாங்கள் அனைவரும் அந்த உருவத்தை துரத்துகிறோம் கடைசியில் அது பேயும் அல்ல பிசாசும் அல்ல அந்த உருவமே நாங்கள் பேய் போல வேடம் போட்டு அனைவரையும் மிரட்டி வருகிறோம் என சொல்கிறது.
அவ்வளவு தான் திடீரென நான் முழித்து விட்டேன் இப்போதும் அந்த பயங்கர கனவு நினைவில் இருக்கிறது யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது அதனால் இங்கு சொல்கிறேன்.
இந்த கனவு நல்ல கனவா? கெட்ட கனவா ? யாரேனும் சொல்லுங்களேன்.