எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  திரவிட முரன்பாடு:

திரவிட கொள்கையில் முரண்பாடு  என்பது இன்று நேற்று ஏற்படவில்லை.இந்த திரவிட கொள்கையை வகுத்த பெரியாரிடமே காணப்பட்டது.பெரியார் போட்ட குட்டிகல் தான்(அனைவரும் அல்ல, ஒருசிலர்)இந்த முரண்பாடுகளை நிருபிக்கும் வண்ணம் கூக்குரல் இடுகின்றன.அவர்களிடம் எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பது தான் நிதர்சன உண்மை.

சாதி ஒழிப்பு முரண்பாடு:                                     

திரவிடர்கள் சொல்வார்கள் எங்கள் கொள்கையின் நோக்கம் சாதி ஒழிப்பு என்று.ஆனால் தாழ்த்தப்பட்டவருக்கான விடுதலை தான் சாதி ஒழிப்பு என்பார்கள்.இவர்கள் சொல்வதை பார்த்தால்.மற்ற எல்ல சாதிகலும் ஒற்றுமையாக இருப்பது போலவும்,இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆதி தமிழர்களை(இவர்கள் சொல்லும் தாழ்த்தப்பட்டவர் என்று இல்லாத ஒன்று)அடிமைபடுத்துவது போல காட்டுகிறார்கள்.உங்கள் கருத்துபடி பார்த்தால். மற்ற சாதிகள் ஒற்றுமையாக இருக்கும் போது எதர்க்கு நீங்கள் பிரமினர் எதிர்ப்பு என்றிர்கள்.சாதிவாரி இட ஒதுக்கிடு கேட்கிறிர்கள்.இதற்க்கு பெயர் சாதி ஒழிப்பா,தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றமா,சாதி பிரிவினையா.சாதி ஒழிப்பு என்றால் அனைத்து சாதிகளை சமமான தட்டில் வைத்து பார்த்து சாதி ஒழிக்க முயன்றால் தானே.அதை சாதி ஒழிப்பு என்று சொல்ல முடியும்.அப்போ திரவிடர்களின் நோக்கம் சாதி ஒழிப்பு அல்ல.சாதி வைத்து சுயலாபம் தேடுகிறார்கள்.

கடவுள் மறுப்பு முரண்பாடு:                        

அவர்கள் அடுத்த கொள்கையாக முன் வைப்பது.கடவுள் மறுப்பு.இவர்கள் கடவுள் இல்லை என்பார்கள்.முருகனுக்கு விரதம் இருந்து காவடி எடுத்தால் மூட நம்பிக்கை.ஆனால் நோம்பு துறக்க மசூதி(அல்லவை)நாடுவார்கள் இது என்ன நம்பிக்கை பெரியார் நம்பிக்கையா.அப்படி என்றால் இவர்கள் நோக்கம் கடவுள் மறுப்பா அல்லது இவர்களை(தெலுங்கு சகோதரர்களை) ஒழித்த பிரமினர்களை ஒழிக்கும் செயலா.கடவுள் மறுப்பு என்றால் அனைத்து மத நம்பிக்கை,கடவுள் கோட்பாடு இதை அனைத்தையும் மறுத்தால் தானே. அதை கடவுள் மறுப்பு என சொல்ல முடியும்.

தீண்டமை ஒழிப்பு முரண்பாடு:                                                

அடுத்து இவர்கள் வைக்கும் கொள்கை தீண்டாமை ஒழிப்பு.தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பார்கள்.அயிரமுறை இவர்களே தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டதகாதவர்கள் என்பார்கள் அதை ஊரெங்கும் உரைப்பார்கள்.தீண்டாமை ஒழிக்க இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஆதி தமிழர்களுக்கு இட ஒதிக்கிடு கேட்பார்கள்.இட ஒதிக்கிடு என்பது இரு நாடுகலுக்கு இடையே உள்ள எல்லை கோடு போன்றது தான். எல்லைக்கோடுகளை வைத்துக்கொண்டு சகோதர துவத்தை எப்படி வளர்க்க முடியும்.அது போல இட ஒதிக்கிடு எப்படி தீண்டாமையை ஒழிக்கும்.மேல்மேலும் தீண்டாமை வளர்க்கத் தான் செய்யும்.

சுயமரியாதை முரண்பாடு:                                        சுயமரியாதை இயக்கம் வளர்ப்பார்கள்.சுயமரியாதை வேண்டும் என்பார்கள்.ஆனால் அடுத்தவரை சிறிதும் மரியாதை இல்லாமல். வெங்காயம்,வெருங்காயம்,பெருங்காயம்,தேசி மகன,வேசி மகன் என்பார்கள்.சுயமரியாதை உடம் வாழ ஆங்கிலம் படிக்க சொல்வார்கள்.ஆனால் தங்களை தமிழர் தலைவர் என்று சொல்லிக்கொள்வார்கள்.

சிலைவழிபாடும், முரண்பாடும்:                                               

 சிலை வழிபாடு முடத்தனம் என்பார்கள். ஆனால் ரஷ்யா சென்றால் சாக்ரெடிஸ் சிலை முன் நின்று புலம்புவார்கள்.அம்பேத்கார்,பெரியார் சிலைக்கு மலர் துவுவார்கள்.இது என்ன சிலை வழிபாடு இல்லாமல்,சிலந்தி வழிபாட.இது போன்று தங்கள் சுயலாபத்திர்க்காக.இன்னும் இது போன்ற அர்த்தம் அற்ற கொள்கைகளை தூக்கி கொண்டு திரிகிறார்கள்.  

மேலும்


மேலே