எண்ணம்
(Eluthu Ennam)
ஆசான் என்றே அடைமொழி உடையோர்....அறிவின் புதையல் அடியேன் கொண்டோர்.....குழப்பம்... (கோபிமு)
05-Sep-2020 7:44 pm
ஆசான் என்றே அடைமொழி உடையோர்....
அறிவின் புதையல் அடியேன் கொண்டோர்.....
குழப்பம் கண்டு குழையும் இடத்தில்....
வழியைவகுப்பர் வெற்றியின் தடத்தில்....
அழியா செல்வம் இவரிடம் உண்டு....
அள்ளித்தருவார் அவர் அவர் திறமைகள் கண்டு....
சிறு சிறு சுண்ணக் கட்டிகள் இரண்டு...
கரு கரு பலகை ஒன்றே கொண்டு...
அறிவை தீட்டும் ஆயிரம் யுக்திகள் இவரிடம் உண்டு....
ஏற்றம் தோற்றம் எதுவும் இல்லை...
வகுப்பின் உள்ளே பகுப்புகள் இல்லை...
அனைவரும் அங்கே குருவின் பிள்ளை...
காலம் கடந்தும் அழியாச்செல்வம்....
கல்வியால் இங்கே உலகினை வெல்வோம்....☺️
அகர முதல கற்று தந்தாய்
ஆதி பகவன் நீயே ஆனாய் ஈடில்லா புகழை கண்டாய்
நீ மட்டும் எனக்கு ஆ போட சொல்லி தராமல் இருந்தால்
இந்த உலகமே என்னை சீ போட்டிருக்கும்
உலியும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
என்னை செதுக்கிய சிர்ப்பியே தமிழ் உள்ள வரை நீ வாழ்வாயாக