எண்ணம்
(Eluthu Ennam)
கஜா-பொங்கல் கறவை மாடு ,கன்றுக்குட்டி காலை சுற்றிய பூனைக்குட்டி... (ஆ புருசோத்தமன்)
14-Jan-2019 11:29 pm
கஜா-பொங்கல்
கறவை மாடு ,கன்றுக்குட்டி
காலை சுற்றிய பூனைக்குட்டி ,
காணாமல் போயிற்றே கண்ணிமைக்கும்
நேரத்தே !
வீட்டு கூரையிலே
வீற்றிருந்த காகமெல்லாம்
காட்டுக்கு சென்றனவே
கூரையை காணாமல்.
தென்னை மரங்களில்
தென்மான்கு பாடியவை .
புன்னை மரக்கிளையில்
புதைந்து கிடக்கின்றன .
காத்திருந்தேன் நெல்
கதிராய் வருமென ,
காலம் செய்தது
மண்ணாய் போவென.
கால்கடுக்க உழைத்தேன் என்
கண்ணகியின் கால்சிலப்புக்கு ,
கடனுக்காக சென்றது என்
கைவண்டி வங்கிக்கு .
காலத்தின் கோலமதை
கட்டாயம் ஏற்க வேண்டும் .
காணாமல் போன வாழ்வை
காண்பது நான் எந்நாளோ ?
இதனை கவலையில்
இருந்தாலும் வாழ்த்துகிறேன் ,
எம்மக்கள் பொங்கலை .
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்.