எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

           ----------------------------------ஒன்ஸ் மோர் ஃ பார் யு -----------------------------------------



18-Jun-2019 5:58 pmகவின் சாரலன் :பிராம்மணீயம் அல்லது பார்ப்பனீயம் என்பது இங்கே புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட பெயர் குறியீடு பிராமணர் அல்லது பார்ப்பனர் அந்த சாதியை குறிக்கும் . எந்த சாதியை குறித்தும் இழிவாக பேசுவது சட்ட ரீதியாக குற்றம் . ஆதலால் கோயில் வழிபாடு தர்மம் என்று இந்து மதம் போற்றும் வழி முறைகளை இங்கே பார்ப்பனீயம் என்ற பெயர் குறியீட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.வடக்கே இது இந்துத்துவம் ஆன்டி பார்ப்பனீயம் என்று ஏதாவது எதிர்ப்பை உளறிக் கொட்டினால் தனக்கு ஒரு சீர்திருத்த முத்திரையும் அரசியல் அடையாளமும் கிடைத்துவிடும் என்பது தமிழகத்தில் பல காலமாக ஒரு மூட நம்பிக்கையாக ஆகிவிட்டது . ஆன்டி பார்ப்பனத்தை விட்டுவிட்டு விவரம் தெரியாத சினிமா அண்ணாச்சி மாமன்னன் மகுடத்தில் போய் கைவைத்திருக்கிறார். சும்மா விடுவார்களா மன்னன் சாதியை சேர்ந்தவர்கள் . "மம்தாவை குறிப்பிட்டு உள்ளீர்கள். அவர் பார்ப்பனர் என்ற போதும் அவரின் செயல்பாடுகளில் சிலவும் கடைந்தெடுத்த அரசியலை மட்டுமே காட்டுகிறது. " பார்ப்பனர் என்றால் அரசியலில் பாகவதம் படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? சாணக்கியன் என்ற பிராமணன் குடிசையில் எளிமையாக வாழ்ந்து மறை ஓதி முக்தி அடைந்திருந்தால் சந்திர குப்தன் அரியனை ஏறியிருக்க முடியாது அரசியலுக்கு அர்த்த சாத்திரம் என்ற அற்புத புத்தகம் கிடைத்திருக்காது . "கையறு நிலையில் சொல்வதென்றால் நம்மை ஏதோ சாபம் சூழ்ந்து உள்ளது எனலாம். " --------இது ஒரு fatalistic attitude ----இன்றைய இளைஞன் இவ்வாறு சிந்தித்து தலையில் கைவைத்து அமர்ந்தால் இந்தத் தீய சதிகளிலிருந்து இந்த நாட்டிற்கு ஒரு நாளும் விமோசனம் இல்லை . இவர்கள் கருதியே இவ்வளவு எழுதினேன் . இந்திய நாட்டு நேரிடை அரசியல் பற்றியெல்லாம் எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை . தெற்கோ வடக்கோ இங்கே அரசியல் சாமர்த்தியமாக ஆட்டும் சகுனியின் சூதாட்ட களம் . வேண்டுமானால் பாரதியின் பாஞ்சாலி சபதம் படியுங்கள் . உணர்ச்சி பொங்கி வரலாம் கையறு நிலை குறுக்கிடுமானால் சபதம் விடைபெற்று சாபம் சூழ்ந்தது என்று தளர்ந்து போகலாம் . மீண்டும் தேர்தல் ஆரவாரம் கேட்க்கும் . கூட்டணி குதூகலிக்கும் . இன்னும் சில நடிகர்கள் அரசியல் நடன அரங்கேற்றம் செய்வார்கள் . தலைவா என்று கூச்சல் வானைப் பிளக்கும் . ஒன்ஸ் மோர் பார் யு !

குறிப்பு : கவி கதை சகோ ஸ்பரிசனின் கதை யில் நான் தெரிவித்த கருத்து.
இங்கே  நாடு சமூகம் அரசியல் பற்றியும் உரக்கச் சிந்திக்கும் இன்னும் சிலருக்காகவும் ....  

மேலும்


மேலே