எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதியோர் காப்பகமும் குழந்தைகள் காப்பகமும்.


இப்போதெல்லாம் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அவர்களது முதுமைக் காலத்தில் விட்டு விடுகிறார்கள் இல்லையா?
மற்றவர்கள் அனைவரும்,
"இக்காலப் பிள்ளைகளுக்குப் பாச உணர்வும் குடும்பப் பிணைப்பும் இல்லை",
என்று திட்டுகிறார்கள் அல்லவா?

இதற்கு என்ன காரணம்?

பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது அவர்களைப் பெற்றோர்,
தம்முடன் வீட்டில் வைத்து அன்புடன் அரவணைத்து வளர்க்கிறார்களா?

தாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால்,
குழந்தைகள் காப்பகத்தில் யாரோ ஒரு, கூலிக்கு மாரடிக்கும் ஆயாவின் பொறுப்பில் விட்டு விடுகிறார்கள் அல்லவா?

அப்புறம் அவர்களுக்கு இரண்டரை வயதானதும் குழந்தைகள் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள் இல்லையா?

அப்புறம் அவர்களுக்குப் பத்து வயதானதும் அவர்களை உயர் கல்விப் பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார்கள் இல்லையா?

படிப்பு முடிந்ததும் அவர்களை வெளியூருக்கு வேலைக்காக அனுப்பி விடுகிறார்கள் அல்லவா?
அங்கும் ஓட்டல் சாப்பாடு அல்லது சொந்தச் சமையல் என்று தனிமை வாழ்க்கை!!

அப்புறம் எப்படிப் பிள்ளைகளுக்குப் பாசம் வரும்?

குடும்பப் பண்பாடு எங்கிருந்து வரும்?

கூடி இருத்தல், பகிர்ந்து உண்ணுதல், அப்பாவின் வழிகாட்டல், அம்மாவின் பாசம் கொண்ட வீட்டு உணவு, தம்பி தங்கையரின் அன்பு இவையெல்லாம் எங்கிருந்தையா அவர்களுக்குக் கிடைக்கிறது?

இப்படி இருக்க முதியோருக்குப் பிள்ளைகள் தமக்குக் கிடைத்ததைத தானே 
"பதில் மரியாதை" என்று திருப்பிச் செய்வார்கள்?

குழந்தைகள் காப்பகங்களை ஒழித்து விட்டு,
பெற்றோர் பொறுப்புடன் தம் அன்பைப் பொழிந்து பிள்ளைகளை வளர்த்தால்தான்
முதியோர் இல்லங்கள் ஒழியும்!!

----- செல்வப் ப்ரியா    --   சந்திர மௌலீஸ்வரன் மகி.
12 ஜனவரி 2020  -  ஞாயிற்றுக் கிழமை.


மேலும்


மேலே