எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் அன்பு தோழி....


உணர்த்த முடியாத சில வலிகளையும் என் முகபாவனையில் அறிந்து கொள்ப(அ)வள்....

கவலைகள் சூழ்ந்த போது உடன்பிறந்த சகோதரி போல கட்டியணைக்கும் உடன்பிறவா சகோதரிய(அ)வள்...

எது செய்தாலும் பாராட்டி நான் உயர மனதார வாழ்த்தும் ஆசான(அ)வள்.....

சோகக்கடலில் மூழ்கும் போது மறு  அன்னையாய் மடியில் உறங்க வைத்தவள(அ)வள்....

நான் பிழைகள் செய்யும் பொழுது மறு தந்தையாய் அறிவுரை கூறுபவள(அ)வள்...

என் வாழ்க்கையில் வந்த சில போலி உறவுகள் மத்தியில் இறைவன் எனக்க(அ)ளித்த வரம(அ)வள்....

பலர் என்னை வேண்டாம் என்று ஒதுக்கிய போதிலும் என் கரம் பிடித்து கொண்ட என் உயிர் நட்ப(அ)வள்....

துவண்டு போகும் தருணங்களில் தன்னம்பிக்கை கொடுக்கும் இதயம் கொண்டவள(அ)வள்...

யாரிடமும் சொல்ல முடியாத ரகசியத்தை சொல்ல வைத்து விடும் தோழிய(அ)வள்....

என் வாழ்க்கையில் முதலில் கிடைத்த உண்மை நண்பன(அ)வள்....

துயரம் வரும் பொழுது அவள் மழலை மொழியில் அனைத்தையும் மறக்கடிக்க செய்யும் குழந்தைய(அ)வள்....

என் தேவதை அவள்.... என் தமிழ் அவள்....என் தமிழ் செல்வி அவள்....என் உயிர்  அவள்...என் குண்டச்சி அவள். ....😋என் வெள்ளச்சி அவள்😋...

விளக்கும் திரியும் ஒருபோதும் ஒன்றை ஒன்று  பிரியாதது  போல்.... அவள் மீது கொண்ட நட்பு எத்தனை சண்டைவந்தாலும் என் உயிர் இருக்கும் வரை பிரியாது...




        

மேலும்


மேலே