எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காய்ந்த வயிறு...
பசியால் கதறுகிறது...!

கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் 
உண்டியலும் இங்கு நிறைகிறது....!

மூன்று வேளையில் ஒரு வேளை இல்லை என்றாலும் சிலர் சிறுமூளை சிதைகிறது.....!

மூன்று வேளையில் ஒரு வேலை கிடைக்குமா என்ற கனவோடு சிலர் வயிறோ பதறுகிறது....!

பசியை உணர்ந்த வயிறு 
ருசியை வெறுக்கிறது...!

ருசியை உணர்ந்த வயிறோ
பசியை உணர மறுக்கிறது...!

பிரசவத்தின் வலியை விட
பிரபஞ்சத்தின் பசியின் வலி 
நாள்தோறும் உயர்கிறது....!

உன் தர்மம் பிறரது பசிக்கு உணவு எனில்
உன் அதர்மம் இந்த உலகத்திலேயே  மன்னிக்கப்படுகிறது.....!

பசியை உணர்வோம்....!
பசியில்லா உலகத்தை உருவாக்குவோம்...!
Create by ✍️ thamim ✍️

மேலும்

அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்து .... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற படைப்பு வாழ்த்துக்கள் தோழர் .. நம்மால் இயன்ற வரை போக்கிடுப்போம் பிறரின் பசியை .... 17-Apr-2020 9:45 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே