எண்ணம்
(Eluthu Ennam)
பாட்டி
என் அன்னையிடம்
பலமுறை கேட்டிருக்குறேன்
எப்படி உன்னிடம் மட்டும்
இவ்வளவு அன்பும், அமைதியும் பொறுமையும் இருக்கிறது என்று...
அந்த ரகசியத்தை சிறு
புன்னகையில் மறைத்தாள் அவள்...
என் அன்னைக்கும் நீ அன்னை
என்பதனால் என்னவோ
உன் பாசம் என் அன்னையிடம்
சிறுதுளியாய் ஒட்டி இருந்திருக்கிறது...
காலம் கடந்து தெரிந்த
என் அன்னை மறைத்த
ரகசியம் நீ...