எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நஞ்சு

அளவுக்கு மீறினால் 
அமிர்தமும் நஞ்சு
அதனால் தான் என்னவோ
அளவுக்கு மீறின என் 
ஹார்மோன்கள் மாற்றத்தால் 
இன்று அமிர்தமாய் இருக்க வேண்டிய 
என் வாழ்க்கை நஞ்சாகி போனதோ!!

செ. கோகுலப்ரியா

மேலும்

வாழு வாழ விடு 

ஓரறிவு முதல் ஆறறிவுள்ள
உயிர்கள் வாழும் இப்புவியில்
எம் சமுதாயம் மட்டும் வாழ 
தகுதியட்ரதேனோ!

ஈன்றோர் இருந்தும்
யாருமட்ற அனாதைகளாக வீதிக்கு 
விரட்டபட்டதேனோ!

சொந்தம் பல இருந்தும்
இவ(ள்)ன் என் சொந்தமென
செல்லம் கொஞ்ச எவருமில்லாமல் 
போனதேனோ!

தம்பி தங்கைகள் இருந்தும்
இவ(ள்)ன் என் உடன்பிறந்தவ(ள்)ன் 
என அனைவரிடமும் சொல்ல 
வெட்கபடுவதேனோ!

என் வயிற்று பசி தீர்க்க 
பலர் உடற்பசித் தீர்த்து
இன்று வேசியாய்
மாறியதேனோ!

கல்விக்காக புத்தகங்களை 
கையேந்துவதற்கு பதிலாக இன்று
கலவிகாக காண்டம்களை 
கை எந்தியதேனோ!



நன்கு அலங்கரித்து 
அழகான உடை உடுத்தி
வீதியில் உலா வரும்பொழுது
ஒன்பது, அலி, உஸ், அரவாணி என
கேலிப் பேச்சுகள் 
பேசுவதேனோ!

எம்மை
உன் மக(ள்)ன் என அடையாளப்படுத்த வேண்டாம் 
திருநங்கை என எள்ளி நகையாட வேண்டாம்
அர்த்தனாதி என போற்ற வேண்டாம்
கடவுளால் பாரபட்சமின்றி படைக்கப்பட்ட 
இப்ப்புவியில் நீயும் வாழு 
எம் சமுதாயத்தையும் வாழ விடு !!


செ. கோகுலப்ரியா

மேலும்

(ஏ)மாற்றம்

அன்பில் (ஏ)மாற்றம்
அடையாளத்தில் (ஏ)மாற்றம்
உடையில் (ஏ)மாற்றம்
உருவில் (ஏ)மாற்றம்
உறவில் (ஏ)மாற்றம்
உணர்வில் (ஏ)மாற்றம்
காதலில் (ஏ)மாற்றம்
காமத்தில் (ஏ)மாற்றம்
நட்பில் (ஏ)மாற்றம்
பிரிவில் (ஏ)மாற்றம்
கனவில் (ஏ)மாற்றம்
நிஜத்தில் (ஏ)மாற்றம்
எங்கும் (ஏ)மாற்றம்
எதிலும் (ஏ)மாற்றம்
மாற்றம் ஒன்றே மாறாதது – மற்றவர்களுக்கு 
(ஏ)மாற்றமே நிலையானது எங்களுக்கு 
திருநங்கைகளுக்கு!!!


செ. கோகுலப்ரியா

மேலும்

ஏன் இந்த மாற்றம்

எனது அருமை தாயே
கருவில் நான் இன்னாரென்று
தெரியாமல் இருந்த பாசம்
ஈன்ற பொழுது இருந்த பாசம்
இன்று நிருவுரு மாற்றத்தால்
இது தான் நான் என்று சொல்லியபோது
மாறியதேனோ!!!

செ. கோகுலப்ரியா

மேலும்

சாபம்

எது சாபம்
அவனில் இருந்து அவளாக மாறினேன்
அது சாபமா

நிருவுரு மாற்றத்தால் 
உருமாறினனே
அது சாபமா

உருமாறி பெயர்மாறி
புது அவதராம் ஒன்று கண்டேன்நான்
அது சாபமா
எது சாபம்

ஏறபென்றால் என்னவென்று அறியாத
சிறு பாலகனை ஆழ்துணை கிணற்றில்
எண்பது மணி நேர போராட்ட முடிவிற்கு பிறகு
மீட்க முடியாமல் பறி கொடுத்தோமே
அது சாபம்

உன் சுயவிளம்பரத்தின் வெளிப்பாடாக
பதாகை என்ற பெயரில்
தன் எதிர்கால இலட்சியங்களை நோக்கி
பயணித்த பெண்ணின் உயிரைக் குடித்து
அவள் பெட்றோரின் கனவுகளை கற்பனையாக்கினோமே
அது சாபம்

நல்ல கல்வியறிவு இருந்தும்
ஒரு ஏழை மாணவியின் 
மருத்துவ கனவை சிதைத்தோமே 
அது சாபம்
இன்னும் இன்னும் இன்னும் எத்துனை சாபங்கள் 
என்னில் அடங்கா பாவங்கள்

சாபங்களை அழித்து
பாவங்களை தொலைத்து 
புதியதோர் பயணத்தை தொடங்குவோம்
விமோசனத்தை தேடி!!!


செ. கோகுலப்ரியா

மேலும்

(வி)தி

கடவுளின் குழந்தைகள்
“அனாதைகள்”
கடவுளின் பிழைகள்
நாங்கள் - “திருநங்கைகள்”

இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு
அவர்கள் பெற்றோரால்
வீதிக்கு தள்ளப்பட்டனர்
நாங்கள் பெற்றோர் இருந்தும்/ பெற்றோரால்
வீதிக்கு விரட்டப்பட்டோம்  

வீ(வி)தி எதுவாயினும்
துணிந்து வீறுகொண்டு எழுந்து
புதியதோர் வரலாறு படைப்போம்!!



செ. கோகுலப்ரியா

மேலும்

பிறப்பு

அவனும் அவளுமாய் கலந்த
என் பிறப்பை
கடவுளின் சாபமென்றார்கள்
நான் மரபணு பிழை என்றேன்

ஓவ்வோர் சாபத்திற்கும் ஓர்
விமோட்சணம் உண்டு
ஓவ்வோர் பிழைக்கும் ஓர்
திருத்தம் உண்டு

விமொட்சனத்தைப் பெற்று
பிழையை திருத்தி
புதியதோர் பிறப்பெடுத்தேன்
திருநங்கை எனும் சிவசக்தியாக!!!


செ. கோகுலப்ரியா

மேலும்

மூன்றாம் பால்

பெற்றோரின் அரவணைப்பு
உடன்பிறந்தோரின் பாசம்
சொந்தங்களின் நேசம்
நண்பர்கள் பட்டாளம்
நல்ல கல்வி
கௌரவமான வேலை
காதலில் வெற்றி
மகிழ்வான குடும்பம்
நிம்மதியான வாழ்க்கை
இவையாவும் அடைந்திருப்பேன்
என் அடையாளத்தை மறைத்திருந்தால்...

ஆம்!! சமூகத்தின் ஏளனப் பேச்சுகளுக்குப் பயந்து
நிருவுரு மாற்றத்தால் மாற்றமடைந்த
என் அடையாளத்தை மாற்றியமைக்காமல்
நான் நானாக இல்லாமல்
எனக்கும் எனைச் சான்றோர்கும் உண்மையாய்யிலாமல்
எனக்குள் என்னைத் தொலைத்து
என் உணர்வுகளை சிறைவைத்து
தினம் தினம் குற்றவுணர்ச்சியுடன்
என் வாழ்வை வாழ்ந்து இருந்தால்
இவையாவும் அடைந்திருபேன்!!!


செ. கோகுலப்ரியா

மேலும்

தாய்மை

பூப்பெய்தவில்லை
மாதாந்திர உதிரப்போக்கு சிந்தவில்லை
கலவியில் ஈடுபடவில்லை
ஈறைந்து மாதம் கரு சுமக்கவில்லை
மசக்கையில் மாங்காய் கடிக்கவில்லை
பிரசவத்தில் துடிக்கவில்லை
தாய் அமுதம் சுரக்கவில்லை
தாய்ப் பால் ஊட்டவில்லை
இருந்தும் தாயானேன்
என் திருநங்கை மகளுக்கு
திருநங்கைத் தாயானேன்!!!

மேலும்


மேலே