எண்ணம்
(Eluthu Ennam)
காதல் களையாமல் கண்ணாடியாய் கையாண்டேன்அழகாய் தெரிய என்னையே செதுக்கிக்கொண்டேன்உன்னில்தானே... (சங்கீத் ஜோனா)
05-May-2021 2:09 pm
காதல் களையாமல் கண்ணாடியாய் கையாண்டேன்
அழகாய் தெரிய என்னையே செதுக்கிக்கொண்டேன்
உன்னில்தானே என்னையே கண்டேன்
உடைய வாய்ப்பில்லை என்றிருந்தேன்
ஒருமுகம் தெரிந்த கண்ணாடியில் இன்று நூறு முகம்
களையாத முகம் நொருங்கி சேர்க்கமுடியாத உருவமாய் மாறினேன்
இனி சேர்ப்பது கேள்விக்குறி ஆனது
ஒவ்வொன்றாய் மீண்டும் சேர்க்க துனையொன்று கண்டேன்
ஆனால் அவளே என் துனைவியாவாள் என மணித்துளியும் நினையவில்லை
உடைத்ததும் பெண்ணே சேர்த்ததும் பெண்ணே