எண்ணம்
(Eluthu Ennam)
நித்திரையில் எனக்கோர் நீண்ட நேர போராட்டம்..கண் மூடினால் கனவாக... (Siva K Sankar)
17-Jul-2022 10:48 am
நித்திரையில் எனக்கோர்
நீண்ட நேர போராட்டம்..
கண் மூடினால்
கனவாக நீ..!
கண் விழித்தால்
நினைவாக நீ..!
ஏனென்று புரியாமல்
இழந்துவிட்டேன் நித்திரையை..!
காரணங்கள் தெரியாமலே
காலத்தை கடத்தி விட்டேன்...!
கனவில் தான் வருவேனென்றால்
கண் மூடியே கிடந்திருப்பேன்...
நினைவில் தான் நிற்பேனென்றால்
நிச்சயமாய் விழித்திருப்பேன்....
இரண்டிலுமே வருவதனால்
இவ்வுலகத்தையே மறந்து விட்டேன்..!