எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழா

விழா ஒன்றில் கரகாட்டம் ஆடும் நாட்டுப்புறக் கலைஞர்கள்
நடிகர், நடிகைகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 6 ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது.

கலை, பண்பாட்டை வளர்ப்பதற் காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடைசி யாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்


மேலே