குறில் எழுத்துக்கள்
(Kuril Eluthukkal)
குறில் எழுத்துக்கள்
12 உயிர் எழுத்துகளில் குறுகி ஒலிக்கும் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்பர்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
இவற்றில் "அ, இ, உ, எ, ஒ" ஆகிய ஐந்து எழுத்துக்களும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்து என்றழைப்பர்.
உதாரணம்
அ - அம்மா
இ - இலை
உ - உலகம்
எ - எலுமிச்சை
ஒ - ஒருமைப்பாடு