தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
சுவடுகள்
சுவடுகள்
அந்த இரயிலில் நான்
ஏறும் போதெல்லாம் பார்க்கிறேன்
இறங்கிப்போகும் அவளை!
அச்சமில்லை.. அச்சமில்லை
ஞாபகத்தில்.. தேனருவி
உச்சரிக்க முடியாத உன் முகம்!
பந்தலடி அம்மியில்
மல்லிகைப் பூக்கள்
இன்னும் வராத அவள
காலதாமதமாகவே வரட்டும்
காத்திருப்பாள்.. உண்மைதான்
தண்டவாளத்தில் நத்தை.
கோபத்தை வாழ்த்தினேன்
மூன்று நாட்களாய்ப் பார்க்காத
உன் சோரந்த முகம்.
மனம் நிறைய ஞாபகங்கள்
பிறகு ஜன்னல் திறப்பேன்
போய் வா.. வானவில்!
உன்னிடமிருந்து கடிதம் வருமா!
என் காலண்டர் முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்!
தனித்த அறையில் நான். நீ䤦lt;BR>திமிர்பிடித்த வாலிபமும்
வெளிச்சமாய்.. சில கவிதைகள்!
கண்ணாடியைச் கொத்தும்
சந்தேகச் சிட்டு.
அவளுக்கும் சில அலகுகள்!
எங்கள் காதலின்
எலும்புகள் மட்டும்
அவள் போன தண்டவாளங்கள்