மழை..

பல மாதங்களாய்
யோசித்து
மேக கவிஞன்
எழுதி
வெளியிடும்
கவிதை தொகுப்பு - மழை!

வசந்தத்தை
வரவேற்க
வானம் செய்யும்
வாசல் தெளிப்பு - மழை!!

பாலம் பாலமாய்
வெடித்திருக்கும்
நீர்நிலை எனும்
திருவோட்டை
ஏந்தி நிற்கும்
ஏழை பூமிக்கு
வான செல்வந்தன்
அள்ளி வீசும்
வெள்ளி காசுகள் - மழை!!

கோடைக்கால பள்ளிக்கு
அனுப்ப
தாவரக்குழந்தைகளை
குளிப்பாட்டும் தாய் - மழை!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:35 pm)
பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே