மலர்களே மலர்களே மலரவேண்டாம்

மலர்களே மலர்களே மலரவேண்டாம்
உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே இன்று இல்லை
ஓய்வெடுங்கள்
இன்று தோழனை அழைத்துவந்து
தேனை விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து
விருப்பம்போல வாழும் (மலர்களே)

ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டுமாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே

சிறந்த சில நொடிகள் - வாழ்ந்துவிட்டேன்
என்னுள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்த விடுதலைக்கிணையின்று ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி ( மலர்களே)

நீரோடு ஒரு காதல்
கடலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் என்னைப்பார்க்க
மணல் வெளியில் நாள்முழுதும் கிடப்பேன்
புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.. (மலர்களே)


கவிஞர் : தாமரை(6-Dec-12, 12:31 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே