சடகோபர் அந்தாதி - நூல் பாகம் 2

ஆயரம் மாமறைக் கும்அலங் காரம் அருந்தமிழ்க்குப்
பாயிரம் நாற்கவிக் குப்படிச்சந் தம்பனு வற்குஎல்லாம்
தாய் இரு நாற்றிசைக் குத்தனித் தீபந்தண் ணங்குருகூர்ச்
சேயிரு மாமர பும்செவ் வியான்செய்த செய்யுட்களே. 9

செய்ஓடு அருவிக் குருகைப் பிரான்திரு மாலைநங்கள்
கைஓர் கனிஎனக் காட்டித்தந் தான்கழற் கேகமலம்
பொய்யோம் அவன்புகழ் ஏத்திப் பிதற்றிப்பித் தாய்ந்திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10

ஆற்றில் பொதிந்த மணலின் தெகையரு மாமறைகள்
வேற்றில் பொதிந்த பொருள்களெல் லாம்விழு மாக்கமலம்
சேற்றில் பொதியவீழ்க் கும்குரு கூரர்செஞ் சொற்பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒருகூறு நுவல்கிலவே. 11

இலவே இதழுள வேமுல்லை யுள்ளியம் பும்மொழியும்
சிலவே அவைசெழுந் தேனொக் குமேதமிழ்ச் செஞ்சொற்களால்
பலவே தமும்மொழிந் தான்குரு கூர்ப்பது மத்துஇரண்டு
சலவேல் களும்உள வேயது காண்என் தனியுயிரே. 12


உயிர்உருக் கும்புக் குஉணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர்உருக் கொண்டநம் தீங்குஉருக் கும்திரு டித்திருடித்
தயிர்உருக் கும்நெய் யொடுஉண் டான்அடிச்சட கோபன்சந்தோடு
அயிர்உருக் கும்பொரு நல்குரு கூர்எந்தை அம்தமிழே. 13

அந்தம் இலாமறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளை
செந்தமி ழாகத் திருத்தில னேல்நிலைத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும்என் னாம்தமி ழார்கவியின்
பந்தம் விழாஒழு குங்குரு கூர்வந்த பண்ணவனே. 14

பண்ணப் படுவன வும்உள வோமறை யென்றுபல்லோர்
எண்ணப் படச்சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித்தலை வேந்தன்மலர் உகுத்த
சுண்ணப் படர்படப் பைக்குரு கூர்வந்த சொல்கடலே. 15

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்குஅளித் தான்களித்தார்
குடலைக் கலக்கும் குளிர்சங்கி லான்குறை யாமறையின்
திடலைக்கலக்கித் திருவாய் மொழிஎனும்தே னைத்தந்தான்
நடலைப் பிறப்புஅறுத்து என்னையும் ஆட்கொண்ட நாயகனே. 16

நாய்போல் பிறர்கடை தோறும் நுழைந்துஅவர் எச்சில்நச்சிப்
பேய்போல் திரியும் பிறவி யினேனைப் பிறவியெனும்
நோய்போம் மருந்தென்னும் நுன்திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய்போல் உதவிசெய் தாய்க்குஅடியேன் பண்டென் சாதித்ததே. 17

சாதிக் குமேபற தத்துவத் தைச்சம யத்திருக்கை
சேதிக் குமே ஒன்று சிந்திக் குமேயத னைத்தெரியப்
போதிக் குமேஎங்கும் ஓங்கிப் பொதுநிற்கும் மெய்யைப்பொய்யைச்
சோதிக் குமேஉங்கள் வேதம் எங்கோன்தமிழ்ச் சொல்எனவே. 18

சொல்என் கெனோமுழு வேதச் சுருக்கென் கெனோஎவர்க்கும்
நெல்என் கெனோ உண்ணும்நீர் என்கெனோ மறைநேர்நிறுக்கும்
கல்என் கெனோமுதிர் ஞானக் கனியென் கெனோபுகல
வல்என் கெனோகுரு கூர்எம் பிரான்சொன்ன மாலையையே. 19

மாலைக் குழலியும் வில்லியம் மாறனை வாழ்த்தலர்போம்
பாலைக் கடம்பக லேகடந்து ஏகிப் பணைமருதத்து
ஆலைக் கரும்பின் நரேல்என்னும் ஓசையை அஞ்சியம்பொன்
சாலைக் கிளிஉறங் காத்திரு நாட்டிடம் சார்வார்களே. 20

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில்தளிர் மெல்லடித்தண்
மூரல் குறிஞ்சி நகைமுகம் நோக்கற்குநீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறிநினை தோறும் துணுக்குஎனுமால்
வாரல் குறுகைப் பிரான்திரு ஆணை மலையவனே. 21

மலையார மும்கடல் ஆரமும் பன்மா மணிகுயின்ற
விலையார மும்விர வுந்திரு நாடனை வேலைசுட்ட
சிலையார்அமுதின் அடிசட கோபனைச்சென்று இறைஞ்சும்
தலையார் எவர்அவ ரேஎம்மை ஆளும் தபோதனரே. 22

போந்துஏ றுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்துஏ றுஅடர்த்தவன் வீடே பெறினும் எழில்குருகூர்
நாம்தே றியவ றிவன்திரு வாய்மொழி நாளும்நல்கும்
தீந்தே றலுண்டுழலும் சித்தி யேவந்து சித்திக்குமே. 23


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே