சடகோபர் அந்தாதி - நூல் பாகம் 3

சித்தர்க்கும் வேதச் சிரம்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந்தோர் கட்கும் தொண்டுசெய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றி பண்டுசென்ற
முத்தர்க்கும் இன்ன முதம்சடகோபன் மொழித்தொகையே. 24

தொகைஉள வாயபணு வற்கெல் லாம்துறைதோ றும்தொட்டால்
பகையுள லாம்மற்றும் பற்றுள வாம்பழ நான்மறையின்
வகையுள வாகிய வாதுள வாம்வந்த வந்திடத்தே
மிகையுள வாம்குரு கூர்எம் பிரான்தன் விழுத்தமிழ்க்கே. 25

விழுப்பா ரினிஎம்மை யார்பிற வித்துயர் மெய்உறவந்து
அழுப்பா தொழியின் அருவினை காள்உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன்வந் தின்றுநின் றான்இள நாகுசங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம்குரு கூர்எம் குலக்கொழுந்தே 26


கொழுந்தோ டிலையும் முகையுமெல் லாம்கொய்யும் கொய்ம்மகிழ்க்கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள்விறல் மாறனென்றால்
அழும்தோள் தளரும் மனமுரு கும்கூ ரையில்
எழுந்துஓ டவுங்கருத் துண்டுகெட் டேன்இவ் இளங்கொடிக்கே. 27

கொடிஎடுத் துக்கொண்டு நின்றேன் இனிக்கொடுங் கூற்றினுக்கோ
அடிஎடுத் துக்கொண்டென் பால்வர லாகுங்கொல் ஆரணத்தின்
படிஎடுத் துக்கொண்ட மாறன்என் றால்பது மக்கரங்கள்
முடிஎடுத் துக்கொண்ட அந்தணர் தாள்என் முடிஎனவே. 28

என்முடி யாதெனக்கி யாதே அரியது இராவணன்தன்
பொன்முடி யால்கடல் தூர்த்தவில் லான்பொரு நைந்துறைவன்
தன்முடி யால்அவன்தாள் இணைக்கீழ் எப்பொரு ளும்தழீஇச்
சொல்முடி யால் அமுதக்கவி ஆயிரம் சூட்டினனே. 29

சூட்டில் குருகுஉறங் கும்குரு கூர்தொழு தேன்வழுதி
நாட்டில் பிறந்தவர்க் காளும்செய் தேனென்னை நல்வினையாம்
காட்டில் புகுதவிட்டு உய்யக்கொள் மாறன்கழல் பற்றிப்போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறைமறை மெய்எனிலே. 30

மெய்யும் மெய் யாது பொய்யும்பொய் யாது வேறுபடுத்து
உய்யும்மெய் யாய உபாயம் வந் துற்ற துறுவினையைக்
கொய்யும்மெய் வாள்வல வன்குரு கைக்கர சன்புலமை
செய்மெய் யன்தனக் கேதனித் தாளன்பு செய்தபின்னே. 31

செய்யன் கரியன் எனத்திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரியல்ல மாட்டா மறைமது ரக்குருகூர்
அய்யன் கவியல்ல வேல்பிறவிக் கடலாழ் வதுஅல்லால்
உய்யும் வகையொன் றும்யான் கண்டிலேன்இவ் வுயிர்களுக்கே. 32

உயிர்த்தாரை யில்புக் குறுகுறும் பாம்ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகைவந் தார்திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர்தா ரைகள் பொடிக்கும்கண் ணீர்மல்கும் மாமறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள்வெளி யாம்எங்கள் அந்தணர்க்கே. 33

அந்தணர்க் கோநல் அருந்தவர்க் கோஅறி யோகியராய்
வந்தவர்க் கோமறம் வாதியர்க் கோமது ரக்குழைசேர்
சுந்தரத் தோளனுக் கோஅவன் தெண்டர்கட் கோசுடர்தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான்வந்து சந்தித்ததே. 34

சந்ததியும் சந்திப் பதமும்அவை தம்மி லேதழைக்கும்
பந்தியும் பல்அலங் காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப் பவரை வணங்கும் வகையறிவீர்
சிந்தியும் தென்குரு கூர்தொழு தார்செய்யும் தேவரையே. 35

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதையுள் ளம்புகுந் தார்எவர்என்
றேவரை ஏறிமொழிகின்ற போதியம் பிற்றுஇறைவர்
மூவரை யோகுரு கூரரை யோசொல்லும் முந்துறவே. 36

துறவா தவர்க்கும் துறந்தவர்க் கும்சொல்ல வேசுரக்கும்
அறவா அவைஇங்கு ஓர்ஆயிரம் நிற்கஅந் தோசிலர்போல்
மறவா தியர்சொன் னவாசக மாம்மலட்டா வைப்பற்றி
கறவாக் கிடப்பர்அங் குஎன்பெறவோ தங்கள் கைவலிப்பே. 37

கைதலைப் பெய்துஅரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய்என்று மோசென்றுஅவ் வூர்அறிய
வைதலைத் துஏசுது மோகுரு கூர்என்னும் ஆறுஅறியாப்
பைதலைக் கோகுஉகட் டிட்டுஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:23 pm)
பார்வை : 0


மேலே