பூ பூபோல் மனசிருக்கு

பூ பூபோல் மனசிருக்கு

பால் பால்போல் சிரிப்பிருக்கு

தேன் தேன்போல் குணமிருக்கு

வான் வான்போல் வளமிருக்குநீ விண்வெளியில் வட்டமிட்டு

வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே

உங்களுடன் நானிருப்பேன்

நல்லவர்க்கு துன்பமில்லை

நானிருக்க அச்சமில்லை

நல்லவர்க்கு துன்பமில்லை

நீயிருக்க அச்சமில்லைபூ பூபோல் மனசிருக்கு

பால் பால்போல் சிரிப்பிருக்குயார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்

பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்

புன்னகை சிந்துங்கள்

தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்

தங்க முலாமில் பித்தளை உண்டு

தெரிந்து கொள்ளுங்கள்

முயல் போலே விளையாட்டு

குயில் போலே இசைப் பாட்டு

முயல் போலே விளையாட்டு

குயில் போலே இசைப் பாட்டு

இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்துபூ பூபோல் மனசிருக்கு

பால் பால்போல் சிரிப்பிருக்கு

தேன் தேன்போல் குணமிருக்கு

வான் வான்போல் வளமிருக்குநீ விண்வெளியில் வட்டமிட்டு

வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே

உங்களுடன் நானிருப்பேன்

நல்லவர்க்கு துன்பமில்லை

நானிருக்க அச்சமில்லை

நல்லவர்க்கு துன்பமில்லை

நீயிருக்க அச்சமில்லைபூ பூபோல் மனசிருக்கு

பால் பால்போல் சிரிப்பிருக்குஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது

அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது

கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது

கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது

பொன் வண்டு இசை மீட்ட

பூவெல்லாம் தலை ஆட்ட

பொன் வண்டு இசை மீட்ட

பூவெல்லாம் தலை ஆட்ட

புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்நீ விண்வெளியில் வட்டமிட்டு

வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே

உங்களுடன் நானிருப்பேன்

நல்லவர்க்கு துன்பமில்லை

நானிருக்க அச்சமில்லை

நல்லவர்க்கு துன்பமில்லை

நீயிருக்க அச்சமில்லைபூ பூபோல் மனசிருக்கு

பால் பால்போல் சிரிப்பிருக்கு


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:16 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே