பெருந்திணை - பச்சை நாயகி

இராப்பாடி பசியாற
யாசித்து
உதிரும் முதுமையின்
கனவு

கண்டு எய்திய பின்னும்
தேடிச் சலிக்கும் ஞானியின்
தினவு

உற்றார் வெற்றியில்
களிக்கும் கணத்திலும்
உட்பாய்ந்து வருத்தும்
தோல்வியின்
நினைவு

கசந்த்தோர்
எண்சீர் விருத்தமாய்
நலியும் எளிய என்
இதிகாசப்
புனைவு


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 5:15 pm)
பார்வை : 0


மேலே