பேசுவது கிளியா

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா

பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா - இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா - உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா
செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 4:12 pm)
பார்வை : 140


பிரபல கவிஞர்கள்

மேலே