சக்தியொரு பாதியாய்!

சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
... பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்க!
சமகால யோகமிது வெகுகால யாகமென
சம்சாரம் இனிது வாழ்க!


கவிஞர் : கண்ணதாசன்(29-Feb-12, 10:45 am)
பார்வை : 41


பிரபல கவிஞர்கள்

மேலே