கால் முளைத்த பூவே மாற்றான்
கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!
கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!
தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!
ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வினவுகிறேன்.
அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.
இரவெலாம் நிலவு எரிகையில்
திரிகளாய் விரல்கள் திரியுதே!
அருகிலே நெருங்கி வருகையில்
இளகியே ஒழுக்கம் உருகுதே!
நிலவு எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?
எனை ஏனோ... உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்!
அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்
இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்
உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்
எரியும் வெறியை தெறித்தாய்.