ஆறாம் பூதம்

வாழ்வு சேறு

காதல் தாமரை

யாக்கை திரி

காதல் சுடர்

உயிர் நதி

காதல் கடல்

பிறவி பிழை

காதல் திருத்தம்

இருதயம் கல்

காதல் சிற்பம்

ஜென்மம் விதை

காதல் பழம்

லோகம் துவைதம்

காதல் அத்வைதம்

சர்வம் சூன்யம்

காதல் பிண்டம்

மானுடம் மாயம்

காதல் அமரம்.


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 4:34 pm)
பார்வை : 47


மேலே