உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...(பொங்கல் கவிதைப் போட்டி)

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...(பொங்கல் கவிதைப் போட்டி)

நிலையில்லா மனித வாழ்க்கையின்
நிறைவில்லா விளைச்சல் கனவுகள்
நிறைந்த பூமிப்பந்தினை பதப்படுத்திட
நின்று போராடும் உழவர் பெருமக்கள் -
நிரப்பும் மனமில்லாமல் நீரேந்தி
நிற்கும் வானமகள் - பொழிவாளோ???

நிகரில்லா மண்ணில் நீண்டுழைத்து
நிம்மதியற்று வியர்த்து கண்ணீரினை
நிசப்தமாய் சிந்தியவேளை உருவாகிறது
நிற்காது நீந்தும் ஒரு கறுத்த மேகம்

நிறையுமோ காவிரி - பூக்குமோ
நிரம்பிக் கிடக்கும் எம் உழவர் மக்களின்
நிலையானக் கனவுகள் - கிடைக்குமோ
நிரந்தரக் கழனி சுமக்கும் சுக வலி -
நிலைக்குலைந்து அண்ணார்ந்து பார்க்குமவர்க்கு
நிலையென்று மாறுமோ பூமித்தாயே ,,??

நித்தம் மறந்தனரோ அனைவரும் -
நிற்கதியாய் போனவர்க்கு துணையாரென்று-
நிலத்து சேற்றினிலே கால்புதைத்து
நின்றவர்தம் உடலுயிர் விதைத்து
நிலாமகள் ஒளிவீச காவல் காத்து
நிலத்தில் விளைந்த உழவர்தம்மை

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (6-Jan-13, 9:57 pm)
பார்வை : 1151

மேலே