யாரிவன் ..???
உறங்கிய விழிகள்
உறங்காத உள்ளம்
சொப்பனத்திலோரான்
சோர்ந்தபடி வதனம்..!
விண் நோக்கும் மீசை
மண்நோக்கி சரிந்தபடி
தாழாத விழியோரம்
ஈரமோ காய்ந்தபடி..!
பார்த்த முகம்
பழகிய தோற்றம்
பார்க்கும் பார்வையிலே
பல யுக ஏக்கம்..!
பொலிவிழந்த தோற்றத்துள்
தொலைந்த இவன் அடையாளம்
கலைந்த முண்டாசுக்குள்
கலையாத இவன் வீரம்..!
யாரிவன் ..???
( தொடரும் ....)

