காதல் என் முகவரிகள்
விடியலின் வாசலில் இருந்த என்னை
இரவின் தொடக்கத்தில் இழுத்து சென்றாய் .
உன்னுடன் இல்லை என் முகவரிகள் .
உன்னுடன் தொடர்கிறது என் நினைவலைகள்.
மின்மினி பூச்சிகளின் சிறகாய்
சிறகடித்து பறந்தாய்
இவ்வுலகை விட்டு
என் கண்களை சேரும் முன்னரே
கல்லறை சேர்ந்தாய் ஏனோ ?
என் உயிரை எடுத்து சென்றாய்
உன் நினைவுகளை விட்டுவிட்டு .
கடலை பார்க்க நின்ற என்னை
கடலுக்குள் இழுத்து சென்றாய் .
கரும்பாய் இருந்த நம் காதல்
கல்லறை சேர்ந்ததே
கருணை வடிவில் .
உன் ஒரு பார்வையில்
திகைத்து நின்றேன்
ஒரு நொடி .
உன்னை பிரிய மனமில்லாமல்
உன்னை வந்து சேர்கிறேன் பாரடி ................