உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே.(பொங்கல் கவிதை போட்டி)

வானம் அழுகலியே வாய்க்கா நெறயிலியே
கழினி நிலத்துலெல்லாம் பச்சை விளையிலியே.

நீரு கிடைக்காம
நெரச்சு போச்சு நாத்து எல்லாம்
ஏரு உழுத மாட்டுக்கே
இரையாச்சு எம்பயிறு.

காட்டு பூச்சிக்கெல்லாம்
காஞ்ச சருகு உணவாச்சு
கலப்ப தூக்கியிழுத்த
எம்வயிறு காயுதே.

நோட்டு வாங்கி தர
குழந்த அவ கேக்குறான்
காட்ட எழுதி வாங்க
கடன்காரன் வாட்டுறான்.

வித நெல்லு திண்ணும்
கால் வயிறே நிரம்புது
பொஞ்சாதி பொடி தாலி வெச்சும்
குடலில் காத்தே மிதக்குது.

மண்ண உண்ணு வாழ
வழியிருந்த சொல்லுங்க
மெண்ணு திண்ணு பாத்தேன்
முடியலையே எம் மக்கா.

நெறுக்கும் வறுமையிலே நெலகுலஞ்சு அழுகுற
சுருக்கு கயிறிருக்கு சுதந்திரமா போகுறே.

எழுதியவர் : (9-Jan-13, 12:45 am)
பார்வை : 114

மேலே