தை மகளே
தமிழரின் திருநாளாம் தைத்திருநாள்
வருக ,வருக தை மகளே வருக
வருக வருக தலை நிமிர்ந்து வருக
புத்தாண்டின் புதல்வியே வருக
நல் வழிகள் கொண்டு வருக
நாம் கூடிய கொண்டாடிடும் உறவே வருக
உழவன் கடன் தீர்க்க மகளே வருக
உழைக்கும் வர்க்கம் உயிர் பெற வருக
உழவு உலகத்தின் அச்சாணியே வருக
கரும்பு, மஞ்சள், பொங்கல் என்று
நெஞ்சில் ஆசை பொங்க வருக
நீ வர வேண்டும் - நீரும் வர வேண்டும்
கலகலப்போடு வரும் நிலமகளே வருக
கையெடுத்து வணங்கிடுவோமே
தமிழ் உலகம் உன்னை