இயற்கையாய்
மேனியை வருடும் இளந்தென்றல்
மென்மையாய் திருடிசென்றது -என் மனதை
பூத்துக்குலுங்கும் பூங்காற்று - சற்றே
உலுக்கிசென்றது என் உள்ள கிளைகளை!
தூர கேட்கும் கோவில் மணியோசை
சாரல் தூவிற்று என் செவி மணலில்
சுற்றிலும் கருமை! இருந்தும்
கண்சிமிட்டி சுடர் விடும் மின்மினி
காற்றளைகளினால் அசையும் இலைகள்- என்
அகத்தையும் உடன் இசைக்க செய்கின்றனவெ!
அனைத்தின் ஆணவமும் அடங்கிவிட்டது
avaigal போராடி கொணர்ந்த மயக்கம்......
உன் ilanagaiyaal எளிதாய் என்னுள் இன்று!!