2.என்னைக் கவர்ந்த கவிதைகள். உங்களையும் கவரும்.
முகமூடிகள்.....
`````````````````````````
முற்பகல் நகரச்
சந்தடிகளினூடே
எதேச்சையாய் எதிர் கடந்த
பள்ளிவயது பழைய நட்பு....
மாற்றங்கள் திணித்துப்
பெருத்த இருவரிலும்
உதிர்ந்து வீழக் காத்திருக்கும்
அன்றைய மூளைச்செல்
இடறிவிட்ட எதோ ஒன்று......
வெள்ளிவிழாக் கதைகள்
தொடங்கி
விரல் சூப்பும்
பேத்திக் குறும்புகள் வரை
பரிமாறி விலகிய
நொடிகளில்........
" கடைசியாய் அந்த மயிலிறகு
குட்டி போட்டுச்சாடா ?"
வினவிய எனைப்பார்த்து
சிரித்து நகர்ந்தான்
" போடா மக்கு" என்று.......