உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் கவிதை போட்டி)
பொன்னேர் உழுது முன்னேறும் உழவன்
பொண்ணான வாழ்வை எந்நாளும் அறிவான்
மனதை வருடும் மரங்களின் அழகால்
மகத்துவம் பெருகும் மண்ணின் அகத்தில்
மரங்களை வளர்ப்போம் மழையை அழைப்போம் !
மண்ணின் தன்மையால் மனதால் சிரிப்போம்
உழுது தருவான் உழவன் - மண்ணில்
விளையும் நெல் மனியே !
உலகத்தின் பசி போக்கி - உறங்க
சொல்வான் கண்மனியே !
உழவு உழுது உழவன் கூட
இளைப்பாற செல்வான் மரத்தின் மடியில்
உண்மையை சொன்னால் உலகம் கூட
மரங்கள் எனும் அகத்தின் பிடியில் .....
மழை இல்லையெனில் உழவில்லை !
உழவில்லையெனில் உணவில்லை !
உழவும் உழவனும் இல்லையெனில்
மரணத்தின் விளிம்பில் இவ்வுலகம்.......