என் கண்ணீரை ..!
மழை பெய்து
மனம் குளிரச் செய்தது
மழை தன் கண்ணீரை
சிந்தி நிறைப்பதற்கு முன்னரே
என் மனதை
நிறைக்க வரைந்தேன்
பாசத்துடன் அணைத்த கைகள்
அதே வேகத்துடன் தண்டித்தன
மழையின் அழுகை நின்று விட்டன
என் விழியில் வற்றாத நிமிடங்களில்
தண்டித்த அதே நொடியில் ...
ஆறுதலுடன் அரவணைத்தது
என் கண்ணீரோடு இணைந்த
என் அன்னையின் கைகள் ... !!!