உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

விளை நிலங்கள் எல்லாம் விடியல் தருமென
காலம் காலமாய் காத்து காகிதமாய் வந்த கரன்சி
விலைநிலமாய்பிடுங்கிகொள்ள,அதிகாலை
கதிரவன் கரம் படும் முன் எழுந்து,மீதி நிலமாவது
காப்பாற்றும் என்று உழுதிட்ட உழவும்,
சிறு மழையை,வற்றியமண்ணேமுகர்ந்துகொள்ள
நிலத்தடிநீரை நினைவில் வைத்து இறைத்தால்
வண்ணம் ஆக்கப்பட்ட சாயாரசயானகழிவும்
சாக்கடையாய் ஓன்று சேர்ந்து கொல்கிறது
பொன்னான மண்ணையும், மனிதனையும்
வாய்தா வாங்கி வாடி போனது போட்ட விதை
எப்படியாயினும் கலங்காமல் உழைத்த,கலப்பை
தன்னை சொல்லிகொண்டுகாட்சிபொருளாய்இன்று
தானியங்கள் அள்ளிய முறம் கூட முற்றத்தில்
மரணித்து விடும் நிலையில் இருக்கும், மாடுகள்
சந்தையிலிருந்து காசப்புகடைக்கு,கண்ணீருடன்
"தனியொருவனுக்கு உணவு .....என்றான் பாரதி
உணவளிக்கும் உழவே வழியின்றி உணவின்றி
சிறிது சிறிதாக இறப்பை நோக்கி, இனியும் மாறும்,
இவ்வுலகில்,மரங்கள் வைத்து மழை வரவழைத்து,
இனியும்,பூமிக்கு தீங்கு எதுவும் செய்யமால்,
செயலில் வாழ்வாதாரத்தை பெருக்கினால் ஒழிய,
தொன்று தொட்டே சொல்லப்பட்டுவந்த,எதிலும்
முதன்மையானது உழவு நிஜமாகுமா ????????

எழுதியவர் : த.நந்தகோபால் (9-Jan-13, 9:25 pm)
பார்வை : 236

மேலே