காதல் பாவம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒருத்தனுக்கு ஒருத்தியென்று
வாழ்ந்து வந்தார்கள் அன்று
‘நீ இல்லையெனில் இன்னொன்று’
மாறிப்போனார்கள் இன்று!
ஏன் இந்த மாற்றமோ
ஏவாளின் சாபமோ
மனிதனின் அறியாமையோ
மானத்தின் மரணமோ?
மனதைப் பார்த்து வருவது
அன்றையக் காதல்
உடல் அழகைப் பார்த்து வருவது
இன்றையக் காதல்!
கண்டவுடன் காதலாம்
காணாமலே காதலாம்
கண்ணும் கண்ணும் மோதலாம்
சிரித்தவுடன் காதலாம்!
என்ன கண்றாவியோ
யாருக்கும் தெரியவில்லை
காதலின் நோக்கமோ
இன்னும் புரியவில்லை!
படித்தவள் வேண்டுமாம்
பணக்காரி வேண்டுமாம்
அழகி வேண்டுமாம்
அறிவாளி வேண்டுமாம்!
பட்டியலை வைத்துக்கொண்டு
காதலியைத் தேடிடுவான்
அவளைவிடச் சிறந்தவள்
வந்துவிட்டால் தாவிடுவான் !
ஒருத்தியை வைத்துக்கொண்டு
இன்னொன்றும் தேடிடுவான்
கால நேரம் பார்க்காமல்
கண்டபடி கூத்தடிப்பான் !
வளர்ப்புக் கோளாரா
வளர்ச்சியின் கிளர்ச்சியா
வயதுக் கோளாரா
வக்ரபுத்தி கொண்டவனா?
‘நீயில்லையெனில் நானில்லை’
வசனங்களும் பேசிடுவான்
உன்னைவிட மேல் ஒருத்தி
வந்துவிட்டால் பறந்திடுவான் !
மயக்கும் புன்னகைப்பான்
மறைந்துப் பார்த்திடுவான்
வேண்டுமென்றே உணர்ச்சிகளை
தூண்டிவிட்டுத் தள்ளி நிற்பான் !
செய்வதெல்லாம் செய்திடுவான்
அறியாததுபோல் நடித்திடுவான்
‘சாயம்’ வெளுப்பட்டால்
‘டாட்டா’ சொல்லி மறைந்திடுவான் !
என்னக் காதலடா
காதலுக்கே துரோகமடா
துரோகம் இழைப்பதுவே
அழியாதப் பாவமடா!