தைமகளே வருக!
உழவர்களின் நிலையை உயர்த்தவரும் தைமகளே வருக
நாட்டில் உள்ள அனைவருக்கும் பசியை போக்கும் விவசாயத்தின் பயனை உலகிற்கு அளிக்கவரும் தைமகளே வருக
உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் நிலையை மதிப்பளிக்கும் தைமகளே வருக
நாட்டின் முதுகெலும்பாக செயல்படும் விவசாயதிருக்கும் மாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தைமகளே வருக
உழவுக்கும்,உறவுக்கும் அளிக்க வரும் தைமகளே வருக
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உறவை ஏற்படுத்தும் தைமகளே வருக
நீ வரும் நாளில் செல்வம் செழிக்கும் அதை பெருக்க
வழிசெய் தைமகளே!