உழவின்றி உலகில்லை... (பொங்கல் கவிதை போட்டி)

பிரமாண்ட பங்களாக் கடைகளில் வாயடைத்து

சொன்ன விலைகளில் பொருட்களை

வாங்கும் மக்கள்

உழவர் சந்தையில் ஒரு ரூபாய்

பேரம் பேசி சண்டை போடும் அவலம்

உலகில் ஒன்றிற்கு மாற்றாக

வேறொன்று எல்லாவற்றிலும் உண்டு

ஆனால் உணவில் சோறின்றி வேறில்லை.

அதை கொடுக்கும் உழவனுக்கு

நல்ல சோறில்லை நம் நாட்டில்

கோயில்களில் அந்த பூஜை

இந்த பூஜை என எல்லாவற்றிற்கும்

பணம் உண்டு ,பண்டம் உண்டு.

அதை விளைவிக்கும் உழவனுக்கு

எஞ்சியது நஷ்டம் மட்டுமே.

அவனுக்கு கிடைத்த பெயர் சூத்திரன் .

கோயிலில் நின்று மணி ஆட்டுபவருக்கு

பணம் விழுகிறது தட்டில் நூறு நூறாய் .

காரணம் சாதி, என்று சாதி ஒழிகிறதோ

அன்றே உழவனது பொங்கல்.

பெரியோர் முதல் சிறியோர் வரை

உணவு உண்ண காரணம் உழவன்

உழவனின் உழைப்பு உலகத்தின் செழிப்பு.

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (10-Jan-13, 5:32 pm)
பார்வை : 118

மேலே