உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

காடு கழனி வரப்பெல்லாம் கட்டிடமா மாறுதுங்க
அடுக்குமாடி கட்டிடமா மாறுதுங்க!
குழம்புக்குள்ள உழவு மாடு மிதக்குதுங்க
இறைச்சி கறித்துண்டா மிதக்குதுங்க!

காட்டை அழிச்சி வீடு கட்டி ரோடு போட்டீங்க
தாரு ரோடு போட்டீங்க!
தண்ணி ஊற வழி இல்லாம கலந்து போச்சிதுங்க
மழத்தண்ணி கடலுக்குள்ள கலந்து போச்சுதுங்க!

பெய்யும் மழையத்தேக்கி வெக்க வக்கு இல்லீங்க
நமக்கு வக்கு இல்லீங்க!
அடுத்த ஊருல தண்ணி கேட்டு மல்லு கட்டுறீங்க
நீங்க மல்லு கட்டுறீங்க!

மின்விளக்குபோட்டு நகரமங்கே பளபளக்குதுங்க
இரவு கூட பகலைப்போல பளபளக்குதுங்க!
தண்ணி பாய்ச்ச வழியில்லாம பயிரு வாடுதுங்க
இங்கே விவசாயி வயிறு வாடுதுங்க!

உழவுதனை மதிக்காமல் அரசு நடத்துறீங்க!
என்ன அரசு நடத்துறீங்க!
உழவனுக்கு உதவாமல் காலம் கடத்துறீங்க!
வீணே காலம் கடத்துறீங்க!

மரணமதன் விளிம்புலதான் நிக்கவெச்சிட்டீங்க!
உழவையும், உழவனையும் நிக்கவெச்சிட்டீங்க!

எழுதியவர் : வெண்ணிலா (10-Jan-13, 5:58 pm)
பார்வை : 436

மேலே