என் தம்பி எனக்கு ஒரே ஒரு தம்பி.....

என் தம்பி
எனக்கு ஒரே ஒரு தம்பி
செல்ல தம்பி
தங்க கம்பி பிடித்து கொடுத்தான்
எனக்கொரு தும்பி......

இன்று வரை,
எந்நேரமும் விளையாட்டு
ஆதலால் அன்னையிடம்
நாங்கள் வாங்கும் திட்டு
என்றும் திகட்டாத லட்டு....

திட்டிய அன்னையும்
சிரித்திடுவாள்
சிறப்பான எங்கள் பேச்சு
அடங்காத வால்தனம் கண்டு

ஐம்பது பைசா மிட்டாய்க்கும்
அடிச்சுக்குவோம் நாங்க,
ஆதலால்
பாதி பாதி கடிச்சுத்தான்
பங்கு வச்சு கொடுப்பாங்க.....

மின்சாரம் இன்றி
மின்மினி பூச்சி ஒளியில்
மாடி படி இறங்கி போக
மறைஞ்சு நின்னு பயமுறுத்தி
மயக்கம் போட்டு நான் விழ
கதறி கதறி அழுதானே...
அந்த காட்சி இன்னும் சுகம்தானே

ஓடும் ரயிலில்
உக்கார்ந்து போகும் பயணிகளுக்கு
பல் தெரிய சிரித்து டாட்டா சொல்லி
மகிழ்வோமே நாங்கள்....
திரும்ப அவர்கள் சொல்லாவிடில்
திட்டுவோமே...

கல்லூரி கலாட்டாகளை
கலந்து பேசி சிரிப்போமே
பல பாடங்களுக்கு படம்
வரைந்து பகிர்வோமே....

ஐந்து வயது வித்தியாசம்
இன்னும் குறையவில்லை
எங்கள் இருவரின் பாசம்....

ஒரு முறை கூட அக்கா என்று
ஆசையாய் அழைத்ததில்லை-அவன்
ஒரு பேச்சுக்கு கூட-என்
கவிதைகள் நல்லா இருக்குன்னு
சொன்னதில்லை
இருந்தும் நான் விடபோவதில்லை
அவனிடமிருந்து
ஒரு பாராட்டு வாங்கும் வரை....


-PRIYA
((((( எனது சகோதரன் கே. பாலமுருகன் அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்....)))))

எழுதியவர் : PRIYA (13-Jan-13, 8:50 pm)
பார்வை : 3877

மேலே