உழவும் உழவனும் மரணத்தின் விழும்பிலே (பொங்கல் கவிதை போட்டி)

கிராமங்களை தொலைத்து
நகரங்களுக்கு சென்ற மக்களே ...
விடுக்கிறேன் ஓர் செய்தியை உங்களுக்கு ..
அடைந்தது நகரம் அல்ல நரகம் தான்..

வயல்வெளியில் விளைந்து மின்னும்
பொற்காசுகள் புலபடவில்லையோ கண்களுக்கு??
கண் திறந்து பாருங்கள் ....
தூசியேதும் துளைக்காது உம் கண்களை ..
கொட்டி கிடக்கும் செம்மண்ணும் செப்பும்
சொல்லுக்கு செவி சாய்க்கும் செந்தமிழர்களை ..

பயிரிடாத காடுகளில் ..
உயிர்த்தெழும் தொழிற்சாலை
உடுத்திகொண்டதெல்லாம் மாசினை தான் ..
உழவும் உழவனும் மரணத்தின் விழும்பிலே ..!!
உண்மையில் மரணம் நம் கருவிழியிலே ...
உலாவும் கலியுகமும் முடிவு பெறாத ..??

காலத்தின் கட்டாயமாயினும் கண்டிக்கிறேன் ...
உன்னை வாழ வைக்கும்
உழவு முறையை உயிர்வாழ வழி செய்வீர் ..
இனிவரும் காலங்களில் ..
வசந்த காலமும் உமக்கே என்பதை
உளமார உரைக்க செய்வீர் ..

காத்திருக்கிறேன் உழவர் தினத்தோடு ..
இனிய காலங்களும் உறவாடும் தினத்திற்காக ..!!

எழுதியவர் : நித்து (13-Jan-13, 8:46 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 120

மேலே