மஞ்சள் தாலி கட்டு மாமா....

ஊரெல்லாம்,
என் மாமன் பேச்சை கேட்க
அவரின் வார்த்தையில்
அனைவரும் இங்கே
கட்டுப்பட்டு கிடக்க...

ஓர் ராத்திரி வேளையிலே
ஊர் உறங்கும் நேரத்திலே
சாமக்கோழி கூவயிலே
சடங்கான பொண்ணான-என்
பொன்முகம் காணவே
மாமன்தான் வந்தாரே....

அணை போட்டு வைத்தும்
அடங்காத ஆசையாலே
அடக்கி வைக்க நினைத்தும்
இயலாத காரணத்தாலே
இரவின் கொடுமையாலே

முத்தம் ஒன்று
சத்தம் இல்லாமல் கேட்டு
ஒத்த காலிலே
ஒரு மணி நேரம் நின்னாரே.....

புல்லாங்குழலின் ஓசையை விட
அவரின் குரலோசை
இனிமையாக காதில்
வந்து விழ...
இளகியது மனம்-ஆசையாய்
அரவணைத்திட எண்ணியது
எதிர்த்தது குணம்-குதித்தது
தவறென்று உரைத்தது
உதிர்த்தது......

என் ஆசை மாமனே.... .
தாலி ஒண்ணும் கட்டாம
வேலி தாண்டி வரலாமா...?
வெட்கப்பட்டு நிக்கலாமா???
வேகவச்சு ஆசையெல்லாம்
கூறு போட்டு திங்கலாமா??
உன் ஆசை நாயகி என்னை
நடு நிசியில்
நடுங்கத்தான் வைக்கலாமா???
ஆந்தையும் அலறும் வேளையிலே
அன்பு முகம் காட்ட நீயும்தான் வரலாமா???
என் முன்னே அடிமையாகி நிக்கலாமா???
நல்ல காலம் பார்த்து
நாலு பேரு கூடி நிக்க
நாதஸ்வர ஓசையோடு
மஞ்சள் தாலி கட்டு மாமா
உன் மடியிலே கிடக்கிறேன் ஆமா....


-PRIYA

எழுதியவர் : PRIYA (14-Jan-13, 2:21 am)
பார்வை : 297

சிறந்த கவிதைகள்

மேலே