மரண அவஸ்தைதான்
தட்டுவதற்கு தயார் தான்
தாழ் திறக்குமா?
தெளிவாகத் தெரிந்து விட்டால்
தெம்பாகத் தட்டலாம்
தெரியாத வரையில்
மரண அவஸ்தை தான்
வானம் வசப்படுமா?
தெரிந்தால் மட்டும் தான்
என்னால் சிறகு விரிக்க முடியும்
தெளிவாகத் தெரியாமல்
சிறகுகளை சிதைத்துகூ கொள்ள
என்னால் எப்படி முடியும்?
உனக்குள் நான் கட்டிய
மெலியதாய்த் தொடுகையில்
இனிதாய் சப்திக்கும்
வீணைக்கம்பிகள் இன்னும்
அறுந்து போகாமல் இருக்கின்றனவா?
தெரிந்து விட்டால்
தட்டி விட்டு
காத்திருப்பதிலும்
ஒரு சுகம் மறைந்திருக்கிறது
தெரியாத வரையில்
மரண அவஸ்தைதான்.