சொய் சொய்.... தை தை...
தை தை.... தை தை....
தை தை.... தை தை....
தையவளும் வந்ததுல தமிழருக்கு நன்மை புள்ள
உழவு செய்தொர்க்கெல்லாம் அதுதான் நாட்டம் புள்ள...
நாம ஊரோ டொன்றாக சேர்ந்து கொண்டாட
அதுதான் பொங்கல் புள்ள....
தை தை... தை தை...
மனசளவு மாற்றத்தில மலையளவு ஏற்றம் புள்ள
பழசு தேவையில்ல அத போக்க வேணும் புள்ள...
நாம கூடிக் கொண்டாட கொலவ போட்டாட
அதுதான் பொங்கல் புள்ள...
தை தை... தை தை...
வீடளவு மட்டுமல்ல உலகளவு சேரு புள்ள
வாதும் சூதுமில்லா மனசு வேணும் புள்ள...
நாம நாலு பேரோட சேர்ந்து கொண்டாட
அதுதான் பொங்கல் புள்ள...
தை தை... தை தை...
ஏடறிவு மட்டத்துல எழுத்தறிவு ஊட்டு புள்ள...
மடமை ஏதுமில்லா உலகம் வேணும் புள்ள...
நாம வாழும் பூமிக்கு நன்றி சொன்னாலே...
அதுதான் பொங்கல் புள்ள...
தை தை... தை தை...
உலகறிந்த தெய்வத்தில பெற்றவரப் பேணு புள்ள...
மனசில் ஏக்கமில்லா வாசம் வேணும் புள்ள..
நாம காணும் தெய்வத்த போற்றிக் கொண்டாலே
அதுதான் பொங்கல் புள்ள...
தை தை... தை தை...
நாடவிட்டு வந்ததுல உறவுவிட்டு போச்சு புள்ள...
உறவே ஏதுமில்லா வாழ்க்க வேண்டாம் புள்ள...
நாம வாழும் நாட்டுக்குள் உறவே இல்லாட்டா
நட்பே சொந்தம் புள்ள...
தை தை... தை தை...
தை தை... தை தை...
தை தை... தை தை...