அருணனே நீ வந்துவிடு...

அலாரம் அழைத்தது!
அடடா மணி நான்கு!
அலறியடித்துக் கொண்டு எழுந்தேன்!
அலுப்பின்றி சுழலலானேன்!

அரை ஏக்கர் வளவல்லவோ?
அவ்வளவும் பெருக்கி!
அழகிய கோலமிட்டு நடுவே!
அறுகுடன் சாணப்பிடி வைத்தேன்!

அடர் குளிர் நீரில் ஒரு!
அரும் குளியல் போட்டுவிட்டு!
அத்தனை வேலையும் முடித்தெடுத்து!
அரிசிப் பொங்கல் பொங்கலானேன்!

அடிவானம் கீழ்த்திசையில்!
அழகாக வெளிக்கும் போது!
அருமை பொங்கல் சிரிக்க வேணும்!
அதற்கு தான் சுழலுகின்றேன்!

அத்தனையும் செய்து விட்டு!
அகம் மகிழ காத்திருந்தேன்!
அருண பகவானே நீ!
அல்லல் தீர்க்க வந்து விடு!

அவனியிலே உள்ள துன்பம்!
அன்பர்களால் வந்த துன்பம்!
அத்தனையும் நீக்கி ஒரு!
அதிர்ஷ்டம் தர வந்து விடு!

அளவின்றி காத்து விட்டேன்!
அகமெனக்கு கனமானது!
அழுகை துடைத்து ஒரு!
அரும் புன்னகை தர வந்து விடு!

அருணன் நீ வரும் வேளை!
அது தான் என் பொன் வேளை!
அமைதியுடன் காத்திருப்பேன்!
அரும் புயலாய் வந்து விடு!

எழுதியவர் : ரா. அச்சலா சுகந்தினி. (14-Jan-13, 6:09 pm)
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே